சென்னை: டிவி தொடர் நடிகை ஷாலினி. இவர் ரியாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன் இவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பிரிய முடிவு செய்தனர். இந்நிலையில் ஷாலினி, ரியாஸ் இருவரும் தற்போது விவாகரத்து பெற்றுள்ளனர். இதனை கொண்டாடும் விதமாக ஷாலினி போட்டோ ஷுட் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அவர் தனது சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ள பதிவில், ‘குரலற்றவராக தங்களை உணரும் நபர்களுக்கு விவாகரத்து பெற்ற ஒரு பெண்ணின் செய்தி இது. ஒரு மோசமான திருமணத்தை விட்டுவிடுவது தவறில்லை. ஏனென்றால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க தகுதியானவர். எப்போதும் உங்களை குறைவாக எண்ணவே வேண்டாம்’ என்றார். இந்த போட்டோ ஷூட்டில் ஷாலினி விவாகரத்து தீர்ப்பை கொண்டாடும் விதமாக மது பாட்டிலுடன் போஸ் தந்துள்ளார். மற்றொரு வீடியோவில் தனது மாஜி கணவருடன் இருக்கும் போட்டோவை அவர் கிழித்தபடி போஸ் தருகிறார்.
50