ஐதராபாத்: மகேஷ் பாபு இப்போது ‘குண்டூர் காரம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். த்ரிவிக்ரம் னிவாஸ் இயக்குகிறார். முழுநீள ஆக்ஷன் படமாக உருவாகிறது. இதில் மகேஷ் பாபு ஜோடியாக 2 கதாநாயகிகள் நடிக்கின்றனர். நடிகை லீலா ஏற்கனவே ஒப்பந்தமான நிலையில், மற்றொரு நாயகியாக பூஜா ஹெக்டே நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் படத்திலிருந்து திடீரென பூஜா ஹெக்டே நீக்கப்பட்டார். பின்னர் அவருக்குப் பதிலாக சம்யுக்தா நடிப்பதாக செய்திகள் வெளியாயின. இப்போது மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். தமன் இசை அமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. நடிகை மீனாட்சி சவுத்ரி தமிழில், விஜய் ஆண்டனியின் ‘கொலை’ படத்தில் நடித்துள்ளார். படம் விரைவில் ரிலீசாகிறது. இந்த படத்துக்காக ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்க ஹாலிவுட் ஸ்டன்ட் கலைஞர்கள் பணியாற்ற உள்ளனர்.
58