செப்-7ல் ஜவான் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் ”ரெடியா” என தலைப்பிட்டு நடிகர் ஷாருக் கான் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகி பாபு, பிரியாமணி நடித்துள்ள படம், ‘ஜவான்’. தீபிகா படுகோன், சஞ்சய் தத் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். ஷாருக்கான் மனைவி கவுரி கான் தயாரித்துள்ள இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில், வரும் செப்டம்பர் 7ம் தேதி திரைக்கு வருகிறது.
படம் வெளியாக சரியாக ஒரு மாதம் இருக்கும் இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். முழுவதும் மொட்டை அடித்து போஸ் கொடுத்திருக்கும் ஷாருக்கான் அந்த பதிவில் “நான் நல்லவனா? கெட்டவனா?.. 30 நாட்களில் தெரிந்துவிடும்… ஜவான் படம் உலகம் முழுவதும் 7 செப்டம்பர் 2023 அன்று ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது.” இவ்வாறு பதிவிட்டுள்ளார். நடிகர் ஷாருக்கான் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.