சென்னை: ‘12 பி’, ‘உன்னாலே உன்னாலே’, ‘தாம் தூம்’ ஆகிய படங்களை இயக்கியிருந்த மறைந்த ஒளிப்பதிவாளர் ஜீவா மகள் சனா விரைவில் இயக்குனர் ஆகிறார். ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் சிறுவயது ஆதித்ய கரிகாலன் கேரக்டரில் நடித்த சந்தோஷ், சிறுவயது நந்தினி வேடத்தில் நடித்திருந்த சாரா அர்ஜூன் இணைந்து நடிக்கின்றனர்.
ஏற்கனவே சாரா அர்ஜூன் குழந்தை நட்சத்திரமாக நிறைய படங்களில் நடித்திருந்த நிலையில், தற்போது அவர் ஹீரோயின் ஆகிறார். சுந்தர்.சி, குஷ்பு இணைந்து தயாரிக்கும் இப்படம் காதல் கதை கொண்டது. விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. ஜீவா இயக்கிய படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். எனவே, சனா இயக்கும் படத்துக்கும் அவர்தான் இசை அமைப்பார் என்று தெரிகிறது.