ஐதராபாத்: இந்த ஆண்டில் அனைத்து தரப்பு ரசிகர்களும் மிகவும் எதிர்பார்க்கும் அறிவியல் புனைவுக்கதை கொண்ட படமாக உருவாகி இருக்கிறது, ‘கல்கி 2898 ஏடி’. இதை ‘மகாநடி’ நாக் அஸ்வின் இயக்கி இருக்கிறார். இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் நடித்துள்ளனர். சந்ேதாஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். பான் இந்தியா படமான இது, வரும் ஜூன் 27ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருவதாக, வைஜயந்தி மூவிஸ் அறிவித்துள்ளது.
அஸ்வத்தாமா கேரக்டரில் தோன்றும் அமிதாப் பச்சன் மூலமாக, ‘கல்கி 2898 ஏடி’யின் உலகத்தைப் பற்றிய பார்வை ரசிகர்களை பிரமிக்க வைத்தது. படத்தை ஆங்கிலத்திலும் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர். இக்கதை 6,000 ஆண்டுகள் நடக்கும் விஷயங்களைப் பற்றி பேசுவதாக அமைந்துள்ளது. 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகப் பிரமாண்டமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.