சென்னை: கமல்ஹாசனின் அடுத்த படத்தில் மீண்டும் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் ‘கமல் 233’. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் வரும் ஆகஸ்ட் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். விரைவில் இது குறித்து தகவல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். அதில் தங்கப்பல் மாட்டிக்கொண்டு, வித்தியாசமான மேனரிசத்தையும் விஜய் சேதுபதி கையாண்டது ரசிகர்களுக்கு பிடித்தது. அதுபோல் இந்த படத்திலும் அவர் வில்லனாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.
ஆகஸ்ட்டில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தெரிகிறது. இந்த படத்துக்கு பிறகு கமல்ஹாசன் தயாரிக்கும் படமொன்றில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பார் என தகவல் பரவியுள்ளது.