சென்னை: இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாபி தியோல், நட்ராஜ், பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகிபாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டி முறையில் சரித்திர படமாக உருவாகும் ‘கங்குவா’, 10 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. கங்குவா டீசர் கடந்த மார்ச் 19ம் தேதி வெளியிடப்பட்டது.
டீசர் வெளியான குறுகிய காலத்தில் 2 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்திய அளவில் இதன் டீசர் டிரெண்டிங்கில் 19வது இடத்தில் உள்ளது. டீசரில் இடம்பெற்ற படத்தின் விஎப்எக்ஸ் பணிகளுக்கு பாராட்டுகள் கிடைத்திருக்கிறது.