சென்னை: 2018ல் விஜய் சேதுபதி, திரிஷா, ஜனகராஜ், கவுரி கிஷன் நடிப்பில் திரைக்கு வந்த ‘96’ என்ற படத்தை இயக்கிய ஒளிப்பதிவாளர் சி.பிரேம்குமார், அடுத்து கார்த்தி ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதில் அரவிந்த்சாமி வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. தற்போது இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராம் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதை அவரே சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் தயாரிக்க, கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். கடைசியாக தெலுங்கில் நாகசைதன்யா நடிப்பில் வெளியான ‘தேங்க்யூ’ என்ற படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார். தற்போது ராஜூ முருகன் இயக்கும் ‘ஜப்பான்’ என்ற படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இப்படம் வரும் தீபாவளியன்று திரைக்கு வருகிறது.
52