சென்னை: ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ள திரில்லர் கதை கொண்ட படம், ‘ஒயிட் ரோஸ்’. மற்றும் ஆர்.கே.சுரேஷ், விஜித், பேபி நக்ஷத்திரா, சசிலயா, கணேஷ், ராமநாதன் நடித்துள்ளனர். பூம்பாறை முருகன் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரஞ்சனி தயாரிக்க, இயக்குனர் சுசி கணேசன் உதவியாளர் ராஜசேகர் இயக்கியுள்ளார். இளையராஜா ஒளிப்பதிவு செய்ய, சுதர்சன் இசை அமைத்துள்ளார். வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். ஒரு பாடலுக்கு ஜோஹன் செவனேஷ் இசை அமைத்துள்ளார். வரும் ஏப்ரல் 5ம் தேதி படம் திரைக்கு வருகிறது. இப்படத்தின் கதைப்படி காவல் கட்டுப்பாட்டு மையம் முக்கிய பங்கு வகிக்கிறது.