பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘அட்ட கத்தி’ படத்தில் அறிமுகமானவர், கன்னட வரவு நந்திதா ஸ்வேதா. சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு சில கன்னட நடிகைகளுக்கு டப்பிங் பேசியிருக்கிறார். விஜய் சேதுபதி ேஜாடியாக நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற படத்தில் ‘குமுதா’ என்ற கேரக்டரில் நடித்து பிரபலமான அவர், தொடர்ந்து ‘முண்டாசுப்பட்டி’, ‘எதிர்நீச்சல்’, ‘நளனும் நந்தினியும்’, ‘புலி’, ‘அஞ்சல’, ‘உள்குத்து’, ‘கலகலப்பு 2’, ‘தேவி 2’, ‘கபடதாரி’ உள்பட பல படங்களில் நடித்தார் என்றாலும், அவரால் முன்னணி இடத்துக்கு வர முடியவில்லை.
தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத நிலையில், நானும் கவர்ச்சியாக நடிப்பேன் என்று சொல்லும்விதமாக, நாள்தோறும் தனது சமூக வலைத்தளத்தில் கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது ‘ஹிடிம்பா’ என்ற தெலுங்கு படத்தில் அவர் நடித்துள்ளார். இதில் இடம்பெறும் ‘ஐ ஆம் தி பேட் கய்’ என்ற பாடல் காட்சியில் கிளாமராக ஆடியுள்ள நந்திதா ஸ்வேதா, ஹீரோ அஸ்வின் பாபுடன் லிப்லாக் காட்சியிலும் நடித்துள்ளார். இதில் நந்திதா ஸ்ேவதா போலீஸ் அதிகாரியாக வருகிறார்.