பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்க, விருது பெற்ற எழுத்தாளர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள படம், ‘லப்பர் பந்து’. இதில் ஹரீஷ் கல்யாண், ‘அட்டகத்தி’ தினேஷ் இணைந்து இரு கதாநாயகர்களாக நடித்துள்ளனர். சுவாசிகா விஜய், ‘வதந்தி’ என்ற வெப்தொடர் மூலம் பிரபலமான சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி இணைந்து இரு கதாநாயகிகளாக நடித்துள்ளனர். தேவதர்ஷினி, பாலசரவணன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் கதைக்காகவும், தங்கள் கேரக்டரில் திறம்பட நடிப்பதற்காகவும், இரு கதாநாயகர்களும் கிரிக்கெட் விளையாட விசேஷ பயிற்சி பெற்றனர். அனைத்து தரப்பு ரசிகர்களும் பார்க்கும் வகையில் கமர்ஷியல் எண்டர்டெயினர் படமாக உருவாகியுள்ள இதன் டப்பிங் பணிகள் சமீபத்தில் தொடங்கியது. முதல் நாளன்று சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி டப்பிங் பேசினார். எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரிக்க, ஏ.வெங்கடேஷ் இணை தயாரிப்பு செய்கிறார். ஷ்ராவந்தி சாய்நாத் நிர்வாகத்தயாரிப்பு பணியை மேற்கொண்டுள்ளார். ஹரீஷ் கல்யாணுக்கு இப்படம் தவிர ‘நூறு கோடி வானவில்’, ‘டீசல்’, ‘எல்ஜிஎம்’ ஆகிய படங்களும் திரைக்கு வருவதற்கு தயாராக இருக்கின்றன.
171