சென்னை: இயக்குனராக இருந்து நடிகராக மாறியவர், எஸ்.ஜே.சூர்யா. தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியாக நடித்து வரும் அவரது நடிப்பில் உருவாகி, இரண்டரை வருடங்களாக ரிலீசாகாமல் இருந்த ‘பொம்மை’ என்ற படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. ‘மான்ஸ்டர்’ என்ற படத்தை தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் மீண்டும் ஜோடியாக நடித்துள்ள படம், ‘பொம்மை’. இதை ராதாமோகன் இயக்கியுள்ளார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். 2020ல் தொடங்கிய இப்படத்தின் பணிகள், கொரோனா பரவல் போன்ற பிரச்னைகளால் தாமதமானது. இந்த நிலையில், வரும் 16ம் தேதி ‘பொம்மை’ படம் திரைக்கு வருவது உறுதி என்று, எஸ்.ஜே.சூர்யா வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளது.
94