சென்னை: சர்வதேச இந்திய திரைப்பட விழா அபுதாபியில் வரும் 26, 27 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்த விழாவில் நடிகர், நடிகைகள் மற்றும் சிறந்த படங்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. நடிகர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், கதை மற்றும் திரைக்கதை, வசனகர்த்தா என்று பன்முகத்திறமை கொண்ட கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. பல்வேறு மொழிகளில் 220க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், கடந்த 1960ல் இருந்து திரைத்துறையில் இயங்கி வருகிறார்.
நடிப்புக்காகவும், தயாரிப்புக்காகவும் பல விருதுகள் பெற்றுள்ளார். இதையொட்டி அவருடைய திரைப்பட சாதனைகளைப் பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் என்ற விருது வழங்கி
கவுரவிக்கப்படுகிறார். மேலும், இந்த விழாவில் நடிகை ஜெனிலியா, அவரது கணவர் நடிகர் ரிதேஷ் தேஷ்முக் ஆகியோருக்கு பிராந்திய மொழிப் படங்களின் சாதனையாளர்கள் என்ற பெயரில் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகின்றனர்.