
ஒரே இடத்தில் நடக்கும் திரில்லர் கதை கொண்ட இதே பாணியில் சில படங்கள் ரிலீசாகி இருந்தாலும், அவற்றில் இருந்து இப்படம் மிகவும் மாறுபட்டிருக்கும். ஆரம்பம் முதல் இறுதிவரை, அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வியுடனேயே ரசிகர்கள் எதிர்பார்க்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. யூடியூப் மூலம் பிரபலமாக இருக்கும் ஆர்ஷா சாந்தினி பைஜூவின் வீடியோவைப் பார்த்துவிட்டு ஹீரோயினாக தேர்வு செய்தோம். அவரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். இப்படத்துக்குப் பிறகு அவர் முன்னணி நடிகையாக மாறுவார்’ என்றார்.
