சென்னை: தமிழில் வெளியான ‘தமிழ்ப்படம்’, ‘விக்ரம் வேதா’, ‘இறுதிச்சுற்று’, ‘மண்டேலா’ உள்பட பல படங்களை ஒய்நாட் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரித்தவர், சஷிகாந்த். தற்போது அவர் இயக்குனராக அறிமுகமாகும் படம், ‘டெஸ்ட்’. இதில் மாதவன், நயன்தாரா, சித்தார்த் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், பின்னணி பாடகி சக்தி ஸ்ரீகோபாலன் இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீரா ஜாஸ்மின் முக்கிய வேடத்தில் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் மூலம் 20 வருடங்களுக்குப் பிறகு மீரா ஜாஸ்மின் மீண்டும் மாதவனுடன் இணைந்து நடிக்கிறார். மலையாள நடிகையான அவர், 2002ல் லிங்குசாமி இயக்கிய ‘ரன்’ என்ற படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார். பிறகு 2004ல் மணிரத்னம் இயக்கிய ‘ஆய்த எழுத்து’ என்ற படத்தில் மாதவன் ஜோடியாக நடித்த மீரா ஜாஸ்மின், தமிழில் கடைசியாக 2014ல் வெளியான ‘விஞ்ஞானி’ என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது 9 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அவர் தமிழில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
280