மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாகவும் இந்திய கர்நாடக சங்கீதத்தில் பெயர் பெற்றவராகவும் இருந்த நடிகை மற்றும் இசை வித்வான் சுபலக்ஷ்மி நேற்று இரவு காலமானார். இவர் தளபதி விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள சினிமாவில் மிகவும் முக்கிய மற்றும் மூத்த நடிகையாக இருந்தவர் சுபலக்ஷ்மி. மலையாள சினிமாக்களில் கிட்டத்தட்ட 75 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் இவர் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடா, மற்றும் ஆங்கில படங்களிலும் நடித்திருக்கிறார்.
படங்களின் நடிப்பது மட்டுமல்லாமல் டப்பிங் செய்வது பாடல் பாடுவது தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பது என திரை துறையில் எக்கசக்கமான பங்கை அளித்துள்ளார். மலையாள சினிமாவில் முக்கிய பாட்டி நடிகைகள் இருக்கும் இவர் நேற்று இரவு காலமானார். சினிமா மட்டுமல்லாது தொலைக்காட்சி, ரேடியோ ஆன்லைன் நிகழ்ச்சிகள் என அனைத்து விதம் மீடியாக்களிலும் அவரது பங்கினை கொடுத்து இருக்கிறார். அதுபோக விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார்.