சென்னை: மலையாளத்தில் அறிமுகமான தேவிகா வேணு, ‘கருப்பு பெட்டி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இப்படத்தை எஸ்.தாஸ் இயக்குகிறார். கே.சி.பிரபாத் தயாரித்து நடிக்கிறார். சரவண சக்தி, கே.சி.பி.தர்மேஷ், கே.சி.பி.மிதுன் சக்ரவர்த்தி, நிஷா, கீர்த்தி, அனிதா நடிக்கின்றனர். ஆர்.மோசஸ் டேனியல் ஒளிப்பதிவு செய்ய, அருண் இசை அமைக்கிறார்.
படம் குறித்து எஸ்.தாஸ் கூறுகையில், ‘இதுபோன்ற சைக்காலஜிக்கல் திரில்லர் படம் இதுவரை வந்ததில்லை. ஹீரோவை விட ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. மலையாளத்தில் வளர்ந்து வரும் தேவிகா வேணு நடித்த ஒரு படத்தைப் பார்த்து, உடனே அவரை ஒப்பந்தம் செய்தோம். அவரும் சிறப்பாக நடித்துள்ளார்’ என்றார்.