சென்னை: உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம், ‘மாமன்னன்’. திரைக்கு வந்த ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ ஆகிய படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் தற்போது இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். வரும் 29ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் பாடல்கள், டீசர் மற்றும் டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், ‘மாமன்னன்’ படத்தைப் பார்த்த சென்சார் குழு, யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
68