சென்னை: விஜய் விஷ்வா ஹீரோவாக நடித்துள்ள படம், ‘பிரம்ம முகூர்த்தம்’. கதை, திரைக்கதை எழுதி டி.ஆர்.விஜயன் இயக்கியுள்ளார். கே.வி மீடியா சார்பில் பி.செந்தில்நாதன் தயாரித்துள்ளார். ஜாபர் வசனம் எழுதியுள்ளார்.
முக்கிய வேடங்களில் அபர்ணா, மதன்பாப், அப்புக்குட்டி, பெஞ்சமின், சி.ரங்கநாதன், அனுமோகன், விஜய் கணேஷ், இமான் அண்ணாச்சி, டி.எஸ்.ஆர், கோதண்டம், அறந்தாங்கி சங்கர், சின்னத்திரை தளபதி நடித்துள்ளனர். இ.ஜே.நவ்ஷாத் ஒளிப்பதிவு செய்ய, சாஸ்தா இசை அமைத்துள்ளார். சினேகன், சி.பாலமுருகன், ஏ.பி.ராஜா பாடல்கள் எழுதியுள்ளனர்.
இளம் ஜோடியின் திருமண ஏற்பாட்டில் நடக்கும் சிக்கல்களையும், திருமணத்தை நடத்த ஹீரோ நடத்தும் போராட்டங்களையும் மையப்படுத்தி படம் உருவாகியுள்ளது. ஏற்காடு, சென்னை, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.