சென்னை: யோகி பாபு நடிப்பில் திரைக்கு வந்த ‘மண்டேலா’ படத்துக்காக தேசிய விருது பெற்ற இயக்குனர் மடோன் அஸ்வின், தற்போது சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா, யோகி பாபு நடித்த ‘மாவீரன்’ படத்தை இயக்கி இருக்கிறார். சாந்தி டாக்கீஸ் தயாரிக்க, பரத் ஷங்கர் இசை அமைத்துள்ளார். இப்படத்தை வரும் ஜூன் மாதம் திரையிட திட்டமிட்டு, தவிர்க்க முடியாத காரணங்களால், வரும் ஆகஸ்ட் 11ம் தேதி திரைக்கு கொண்டு வருவதாக அறிவித்தனர்.
எனினும், அவர்களால் திட்டமிட்டபடி ‘மாவீரன்’ படத்தை வெளியிட முடியவில்லை. இந்நிலையில், வரும் ஜூலை 14ம் தேதி ‘மாவீரன்’ படம் திரைக்கு வருவதை படக்குழு உறுதி செய்துள்ளது. தேதி மாற்றப்பட்டதற்கான காரணம் பற்றி எதுவும் சொல்ல வில்லை.