ஐதராபாத்: மயோசிடிஸ் என்ற தசை அழற்சி ேநாய் காரணமாக பாதிக் கப்பட்டிருந்த சமந்தா, தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஓரளவு உடல்நிலை தேறினார். இந்தநிலையில், விஜய் தேவரகொண்டாவின் ஜோடியாக ‘குஷி’ படத்திலும், இந்தி ‘சிட்டாடல்’ வெப்தொடரிலும் நடித்து முடித்தார். இனி அவர் ஒரு வருடம் நடிக்க மாட்டார். மேல்சிகிச்சை பெற அமெரிக்காவுக்கு செல்கிறார். அங்கு மருத்துவ சிகிச்சைக்கு ஆகும் செலவுகளுக்காக, பிரபல தெலுங்கு நடிகர் ஒருவரிடம் ₹25 கோடி கடன் வாங்கிஇருப்பதாக ஒரு தகவல் வெளியானது.
காட்டுத்தீ போல் பரவிய இச்செய்தியை அறிந்து கோபப்பட்ட சமந்தா, தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ‘மயோசிடிஸ் சிகிச்சைக்கு ₹25 கோடி செலவா? யாரோ தவறான தகவலை உங்களுக்கு கொடுத்துள்ளனர். நான் மேற்கொள்கின்ற சிகிச்சைக்காக மற்றவர்களிடம் பணம் வாங்கவில்லை. எனது துறையில் பணியாற்றியதன் மூலமாக நன்றாக சம்பாதித்துள்ளேன். என்னால் என்னைப் பார்த்துக்கொள்ள முடியும். மயோசிடிஸ் என்பது ஒரு நிலை. அதில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர். அதனால், மருத்துவ சிகிச்சை தொடர்பான சில செய்திகளை வெளியிடும்போது சற்று பொறுப்புடன் இருங்கள்’ என்று கூறியுள்ளார்.