சென்னை: மோகன்லாலை அவரது வீட்டுக்கு சென்று சந்தித்து பேசியிருக்கிறார் அஜித். பல வருடங்களுக்கு முன் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் மம்மூட்டியுடன் சேர்ந்து அஜித் நடித்திருந்தார். ஆனால் இதுவரை மோகன்லாலுடன் அவர் நடிக்கவில்லை. இந்நிலையில் அஜித் நடிக்கும் விடா முயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளார். இதில் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிக்கப்போவதாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் கொச்சியிலுள்ள மோகன்லாலின் வீட்டுக்கு அஜித் சென்று அவரை சந்தித்துள்ளார். அப்போது இவர்கள் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. விடாமுயற்சியில் நடிப்பது தொடர்பாக மோகன்லாலிடம் அஜித் பேசியிருப்பதாக சினிமா வட்டாரத்தில் தகவல் பரவியது. ஆனால் இது நட்பு ரீதியான சந்திப்பு என மோகன்லால் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அஜித்தும் மோகன்லாலும் நல்ல நண்பர்கள். இதற்கு முன்பும் பலமுறை அவர்கள் சந்தித்து பேசியுள்ளனர். அந்த வகையில் அவர்கள் சந்திப்பு நடந்துள்ளது என மோகன்லால் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
44