சென்னை: ரூ5 கோடி மதிப்பிலான சொகுசு காரை வாங்கியுள்ளார் மோகன்லால். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், ஒரு கார் பிரியர். அவரிடம் ஏற்கனவே நிறைய கார்கள் உள்ளன. இந்நிலையில் அவர் ஒரு வெள்ளை நிற ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி வாங்கி உள்ளார். அவர் காருடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மோகன் லால் தனது மனைவி சுசித்ராவுடன் ஷோரூமுக்கு சென்று கார் சாவியை வாங்கி கொண்டார். மோகன்லால் வாங்கிய ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரின் விலை ஐந்து கோடி. இது தவிர மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான லம்போர்கினி கார், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்350 மற்றும் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் ஆகிய ஆடம்பர கார்களையும் அவர் வைத்துள்ளார்.
‘லூசிபர்’ படத்தின் தொடர்ச்சியாக அதன் இரண்டாம் பாகமான ‘எம்புரான்’ படத்தில் மோகன்லால் நடிக்க உள்ளார். கடந்த ஆண்டே திரைக்கதை முடிந்துவிட்டதாக பிருத்விராஜ் அப்டேட் கொடுத்தார். இப்பட படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. இதற்கிடையில் மலைக்கோட்டை வாலிபன் படத்திலும் மோகன்லால் நடித்து வருகிறார். அவர் நடித்து இயக்கி வரும் பர்ரோஸ் படத்தின் படப்பிடிப்பும் நடந்து வருகிறது. இந்த படம் கடந்த 2 வருடமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.