சென்னை: திரி அய்யா’ என்ற ஜாலியான கேரக்டரில் எம்.எஸ்.பாஸ்கர், கோபக்கார மாமியாராக ‘என் உயிர்த் தோழன்’ ரமா, அதிக சிக்கல்கள் நிறைந்த பெத்தபெருமாள் வேடத்தில் திரவ் மற்றும் ‘அசுரன்’, ‘பொம்மை நாயகி’ ஆகிய படங்களில் நடித்திருந்த இஸ்மத் பானு ஆகியோருடன் மாஸ்டர் கார்த்திகேயன், தேவ் ஹபிபுல்லா, விஜயலட்சுமி நடித்துள்ள படம், ‘வெப்பம் குளிர் மழை’. ஆங்கிலத்தில் ‘விகேஎம்’ என்று குறிப்பிடப்படும் இந்தப் படத்தை ஹேஷ்டேக் எப்டிஎஎஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் திரவ் தயாரித்து, எடிட்டிங் மற்றும் ஒலி வடிவமைப்பு செய்து, பாடல்கள் எழுதியுள்ளார். பிருத்வி ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, சங்கர் ரங்கராஜன் இசை அமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெற்றிமாறன் வெளியிட்டார். திருமணமான புது தம்பதிகள் சந்திக்கும் சவால்களை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளது. தேசிய விருது பெற்ற ‘குற்றம் கடிதல்’ படத்தில் உதவி இயக்குனராகவும் மற்றும் ‘மகளிர் மட்டும்’ படத்திலும், ‘சுழல்’ என்ற வெப்தொடரிலும் இணை இயக்குனராகப் பணியாற்றிய பாஸ்கல் வேதமுத்து இயக்கியுள்ளார். இவர், இதற்கு முன்பு கிஷோர் குமார், சுபத்ரா நடித்த ’மெல்லிசை’ என்ற படத்தை இயக்கியவர்.