சென்னை: தனது நீளமான மற்றும் அடர்த்தியான மீசை காரணமாக, மீசை மோகன் என்று அழைக்கப்பட்ட நடிகர், மதுரை மோகன் (76) மரணம் அடைந்தார். உடல்நலக்குறைவின் காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த `மீசை’ மோகன், சிகிச்சை பலனின்றி நேற்று காலை மரணம் அடைந்தார். ‘கும்பக்கரை தங்கய்யா’ படத்தில் மீசை மோகன் அறிமுகமானார். தொடர்ந்து ‘சிட்டிசன்’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘முண்டாசுப்பட்டி’, ‘சீமராஜா’, ‘வீரன்’ உள்பட ஏராளமான படங்களில் சின்ன கேரக்டரில் நடித்து வந்த மீசை மோகன், நிறைய டி.வி தொடர்களிலும் நடித்துள்ளார்.