சென்னை: நானி நடிக்கும் 30வது படத்துக்கு ‘ஹாய் நான்னா’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதற்கான கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நானி. வழக்கமான தெலுங்கு மசாலா பாணியை தவிர்த்து தொடர்ந்து நல்ல கதைக்களம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருபவர். இந்நிலையில் நானி நடிக்கும் 30வது படம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘ஹாய் நான்னா’ என்று தலைப்பிடப்பட்டுள்ள படத்தை ஷவுர்யுவ் இயக்குகிறார். மிருணாள் தாகூர் நாயகியாக நடிக்கும் படத்தை வைரா எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கிறது. ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
59