ஐதராபாத்: நானி, பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் பான் இந்தியா படம், ‘சூர்யாவின் சனிக்கிழமை’. இதை டிவிவி என்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் டிவிவி தனய்யா, கல்யாண் தாசரி தயாரிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் அதிரடி சண்டைக் காட்சியுடன் ஐதராபாத்தில் தொடங்கியது. இக்காட்சியை ராம், லக்ஷ்மன் மாஸ்டர்கள் படமாக்கினர். நானி நடித்தார். இப்படத்தில் அவர் முரட்டுத்தனமான தோற்றத்தில் வருகிறார். முரளி.ஜி ஒளிப்பதிவு செய்ய, ஜேக்ஸ் பிஜாய் இசை அமைக்கிறார்.
81