சென்னை: நயன்தாரா அடுத்து நடித்து வரும் அன்னபூரணி படத்தின் டீஸர் தற்போது வெளியாகி இருக்கிறது. நயன்தாரா சிறிய இடைவெளிக்கு பிறகு தனக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடிக்கிறார். இந்த படத்தில் நடிகர் ஜெய் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இன்று அன்னபூரணி படத்தின் டீஸர் வெளியாகி வைரலாகி இருக்கிறது.
அசைவமே சமைக்காத குடும்பத்தில் இருந்து வரும் நயன்தாரா யாருக்கும் தெரியாமல் அசைவ உணவு போட்டோவை ஆர்வத்துடன் மறைத்து வைத்து பார்த்துக்கொண்டிருக்கிறார். அதனால் கதை காமெடிக்கு முக்கியத்துவம் தந்து இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.