புதுடெல்லி: படத்தொகுப்பாளர் கேரி பி ஹெச் இயக்கத்தில் நிகில் சித்தார்த்தா நடித்துள்ள பான் இந்தியா படம், ‘ஸ்பை’. இப்படத்தின் டீசர் புதுடெல்லி கர்தவ்யா பாதையில் அமைந்துள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை அருகே நேற்று முன்தினம் மாலை வெளியிடப்பட்டது. மறைக்கப்பட்ட இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மரணம் குறித்த ரகசியங்களை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. கதை எழுதி கே.ராஜசேகர் ரெட்டி தயாரித்துள்ளார். நிகில் சித்தார்த்தா ஜோடியாக ஐஸ்வர்யா மேனன், சானியா தாக்கூர் நடித்துள்ளனர். வம்சி பட்சிபுளுசு, மார்க் டேவிட் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீசரண் பக்கலா, விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளனர். ஜூன் 29ல் படம் ரிலீஸ்.
113