பான் இந்தியா ஸ்டார் சமந்தாவுக்கு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்றார் என்றாலும், அந்த நோயின் தீவிரம் குறையவில்லை. இதையடுத்து சிறிது காலம் சினிமாவை விட்டு விலகி மேல்சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்த அவர், ஏற்கனவே ஒப்புக்கொண்ட சில படங்களுக்கு வாங்கியிருந்த அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுத்துவிட்டார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக அவர் நடித்துள்ள ‘குஷி’ படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்தியில் ‘சிட்டாடல்’ என்ற வெப்தொடரில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில், சிகிச்சை பெற சமந்தா வெளிநாடு செல்கிறார் என்று தகவல் வெளியானது. தற்போது அது உறுதி செய்யப்பட்டு, தனது தாயாருடன் சமந்தா நியூயார்க் சென்ற ஏர்போர்ட் வீடியோ வெளியாகியுள்ளது. அங்குள்ள பிரபல மருத்துவமனையில் சமந்தா சிகிச்சை பெறுகிறார். இதற்காக அவர் பல மாதங்கள் அங்கு தங்குகிறார். சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பிய பிறகும் அவ்வப்போது பரிசோதனைக்காக அங்கு வரவேண்டும் என்று டாக்டர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். எனவே, இனி சமந்தா தொடர்ந்து சினிமாவில் நடிப்பாரா என்ற சந்தேகம் அவரது தீவிர ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
43