சென்னை: விதார்த் நடித்திருந்த ‘ஆள்’, சிரிஷ் நடித்த ‘மெட்ரோ’, அசோக் செல்வன் நடித்த ‘ஆக்ஸிஜன்’, விஜய் ஆண்டனி நடித்த ‘கோடியில் ஒருவன்’ ஆகிய படங்களை இயக்கிய ஆனந்தகிருஷ்ணன் இயக்கும் புதிய படத்துக்கு ‘நான்வயலன்ஸ்’ என்று பெயரிடப் பட்டுள்ளது. இதில் பாபி சிம்ஹா, ‘மெட்ரோ’ சிரிஷ், அதிதி பாலன், யோகி பாபு நடிக்கின்றனர். உதயகுமார் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
ஏகே பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு உள்பட 4 மொழிகளில் உருவாகிறது. படம் குறித்து ஆனந்தகிருஷ்ணன் கூறுகையில், ‘1990களில் மதுரை பின்னணியில் நடக்கும் இக்கதை, ஆக்ஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாகிறது. படத்திலுள்ள அனைத்து கேரக்டர்களையொட்டியே கதையும், காட்சிகளும் நகரும். சமத்துவம் பற்றி புதிய கோணத்தில் பேசும் ஜனரஞ்சகமான படமாக உருவாகிறது’ என்றார்.