சென்னை: ஓணம் உடையில் எந்த நடிகை ரொம்ப அழகு என நெட்டிசன்கள் சர்வே நடத்தியது இணையதளத்தில் சுவாரஸ்யமாக அமைந்தது. நேற்றுமுன்தினம் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. மலையாள நடிகைகள் பலர் தமிழில் பிரபலமாக உள்ளனர். அவர்களில் கீர்த்தி சுரேஷ், மாளவிகா மோகனன், அனுபமா பரமேஸ்வன், கல்யாணி பிரியதர்ஷன், அமலா பால் உள்ளிட்ட நடிகைகள் ஓணம் கொண்டாடிய புகைப்படங்களை நெட்டிசன்கள் சிலர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர்.
பின்னர், இந்த நடிகைகளில் ஓணம் உடையில் யார் அழகாக இருக்கிறார்கள் என ரசிகர்களிடம் கேட்க, ஆளுக்கு ஒருவரை சுட்டிக்காட்ட ஆரம்பித்துவிட்டனர். இதனால் இணையதளமே சுவாரஸ்யமாகிப் போனது. இதில் பெரும்பாலும் மாளவிகா மோகனன்தான் ஓணம் உடையில் அழகாகவும் செக்ஸியாகவும் உள்ளார் என கருத்துகளை பதிவிட்டனர். சிலர் அனுபமா பரமேஸ்வரனை பாராட்டியிருந்தனர். இதுபோல் அந்தந்த நடிகைகளின் ரசிகர்களும் அந்தந்த நடிகைகளை புகழ்ந்தபடி இருந்தனர். இளம் பெண்களும் இதில் தங்களை கவர்ந்த நடிகையை பற்றி கமென்ட்ஸ் செய்திருந்தனர்.