ஐதராபாத்: நேற்று முன்தினம் பவன் கல்யாண் பிறந்தநாளையொட்டி, அவர் நடிக்கும் ‘உஸ்தாத் பகத்சிங்’ என்ற படத்துக்கான போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. காக்கிச்சட்டையும், கல்லா லுங்கியும் அணிந்து மாஸ் கெட்டப்பில் பவன் கல்யாண் தோன்றுவது அவரது ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. ரத்தம் தோய்ந்த வாளை அவர் பிடித்துக் கொண்டிருப்பதும், அவருக்குப் பின்னால் தொகுதி மக்கள் நிற்பதும் ரசிகர்களுக்கு பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தை மைதிலி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி, ஒய்.ரவிசங்கர் இணைந்து தயாரிக்கின்றனர். நாளை முதல் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படுகிறது. முக்கிய வேடங்களில் லீலா, அஸ்தோஷ் ராணா, நவாப் ஷா, ‘கேஜிஎஃப்’ அவினாஷ், கவுதமி, நர்ரா சீனு, நாக மகேஷ், டெம்பர் வம்சி நடிக்கின்றனர். அயனங்கா போஸ் ஒளிப்பதிவு செய்ய, தேவி பிரசாத் இசை அமைக்கிறார். ஹரீஷ் சங்கர் இயக்குகிறார்.