சென்னை: எஸ்.தங்கராஜின் தங்கம் சினிமாஸ், சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சேர்ந்து தயாரிக்கும் படம், ‘பீட்சா 4’. நாசர் மகன் அபி ஹாசன், தெலுங்கு நடிகை ரத்திகா முதன்மையான வேடங்களில் நடிக்கின்றனர். இதற்கு முன்பு ‘கடாரம் கொண்டான்’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘மிஷன் சாஃப்டர் 1: அச்சம் என்பது இல்லையே’ ஆகிய படங்களில் அபி ஹாசன் நடித்திருந்தார்.
‘எல் கே ஜி’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘கொரில்லா’, ‘களத்தில் சந்திப்போம்’, ‘அயலி’, ‘சூது கவ்வும் 2’, ‘யங் மங் சங்’, ‘ஃப்ளாஷ்பேக்’, தவிர ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ ஆகிய படங்களில் இணை மற்றும் துணை இயக்குனராகப் பணியாற்றிய கே.ஏ.ஆண்ட்ரூஸ், ‘பீட்சா 4’ படத்தை இயக்குகிறார். ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, ஹரி இசை அமைக்கிறார்.
‘ராட்ச சன்’, ‘மார்க் ஆண்டனி’ ஆகிய படங்களின் திரைக்கதையில் பணியாற்றி இருக்கும் எஸ்.ஜே.அர்ஜூன் கதை, திரைக்கதை எழுதுகிறார். ‘பீட்சா 1’ படக்கதையுடன் நேரடி தொடர்புகொண்ட ‘பீட்சா 4’ படம், திகில் மற்றும் திரில் நிறைந்த பரபரப்பான பயணமாக இருக்கும் என்று கூறப் படுகிறது.