ஐதராபாத்: ஆந்திராவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் இணைந்து சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதையொட்டி ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாண், கடந்த 2 வாரங்களாக வாராஹி யாத்ரா என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அப்போது அவர், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சரும், நடிகையுமான ரோஜா, ‘பவன் கல்யாண் ஒரு நடிகர் என்பதால், அவரைப் பார்க்கத்தான் கூட்டம் வருகிறது. இதெல்லாம் ஓட்டாக மாறும் என்று அவர் கனவு காண்கிறார். மேலும், பவன் கல்யாண் முதலமைச்சருக்கு பாடம் எடுப்பதை பார்க்கும்போது, சன்னி லியோன் ஒழுக்கத்தைப் பற்றி வேதம்
ஓதுவது போல் இருக்கிறது’ என்று பேசினார்.
இதையடுத்து, சன்னி லியோனை இழிவாகப் பேசியதாக அவரது ரசிகர்கள் தங்கள் சமூக வலைத்தளங்களில் ரோஜாவை கடுமையாக விமர்சித்து பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
தன்மீதான விமர்சனங்கள் குறித்த வீடியோவை தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள சன்னி லியோன், ரோஜாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ‘நான் ஆபாச பட நடிகைதான். என்றாலும், எனது கடந்த காலத்தை நினைத்து ஒருபோதும் வருத்தப்பட்டது இல்லை. உங்களைப் போல் இல்லாமல், நான் எதைச் செய்ய விரும்புகிறேனோ அதை வெளிப்படையாக செய்வேன். ஆனால், நீங்கள் அப்படி செய்ய வில்லை. உங்களுக்கும், எனக்கும் இருக்கும் வித்தியாசம் என்னவென்றால், நான் ஆபாச பட உலகை விட்டு வெளியேறினேன். ஆனால், அதை நீங்கள் செய்யவில்லை’ என்று தெரிவித்துள்ளார். தற்போது இந்த டிவிட் பல சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.