ஐதராபாத்: தெலுங்கு இளம் நடிகர் விஷ்ணு மன்ச்சுவின் லட்சியப் படமான, ‘கண்ணப்பா – ஒரு உண்மையான இந்திய காவியக் கதை’ என்ற படத்தின் தொடக்க விழா கடந்த வாரம் நடந்தது. இந்தநிலையில், ‘கண்ணப்பா’ படத்தில் முக்கியமான வேடத்தில் பிரபாஸ் நடிப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து பிரபாஸ், விஷ்ணு மன்ச்சு தரப்பில் எந்த பதிலும் கிடைக்கவில்லை.
தற்போது இத்தகவல் குறித்து விஷ்ணு மன்ச்சு விளக்கம் அளித்துள்ளார். அதாவது, ‘கண்ணப்பா’ படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் பிரபாஸ் நடிப்பது உண்மை என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால், பிரபாஸ் எந்த கேரக்டரில் நடிக்கிறார் என்பது பற்றி சொல்லவில்லை.