நியூயார்க்: ‘மெட்காலா 2023’ நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா அணிந்திருக்கும் வைர நெக்லஸ் விலை குறித்த விபரம் வெளியாகி, ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.மெட்காலா அல்லது மெட்பால் என்பது, நியூயார்க் நகரில் நடத்தப்படும் வருடாந்திர நிதி திரட்டும் பேஷன் நிகழ்ச்சியாகும்.
இதில் பிரியங்கா சோப்ரா கடந்த 2017 முதல் பங்கேற்று வருகிறார். இந்த வருடம் அவர் 3வது முறையாக மெட்காலா நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அவர் தனது காதல் கணவர் நிக் ஜோனாஸுடன் சிவப்புக்கம்பளத்தில் நடந்து வந்தது ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. இந்த ஜோடி மெட்காலா 2023ல் கைகோர்த்து நடந்து வந்தது, நிகழ்ச்சியின் ‘கப்பிள் கோல்’ அங்கீகாரத்தைப் பெற்றது. அப்போது பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த பளபளக்கும் வைர நெக்லஸ் மற்றும் அழகிய ஆடை அனைவரது கவனத்தையும் கவர்ந்தது.
அவரது அழகான வாலண்டினோ உடை மற்றும் பளபளப்பான 11.6 கேரட் வைர நெக்லஸ் பல்கேரியாவில் தயாரிக்கப்பட்டது. இந்த வைர நெக்லஸ் விலை ரூ.204.5 கோடி மற்றும் அது ப்ளு லகூன் நெக்லஸ் வகையைச் சேர்ந்தது. இந்த வைர நெக்லஸ், மெட்காலா 2023 நிகழ்ச்சிக்குப் பிறகு ஏலம் விடப்படும் என்று தெரிகிறது. பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராமில் அந்த நெக்லஸ் போட்ேடாவை பதிவிட்டுள்ளார்.