சென்னை: விக்ராந்த், யோகி பாபு நடிக்கும் பெயரிடப்படாத படத்தை ரமேஷ் சுப்பிரமணியம் எழுதி இயக்குகிறார். இதற்கு முன்பு அவர் இயக்கிய ‘தா’, ‘வில் அம்பு’ ஆகிய படங்கள் வெற்றிபெற்றுள்ளன. இந்நிலையில், பிக் பேங்க் சினிமாஸ் சார்பில் புதிய படத்தை தயாரிக்கிறார். பவித்ரா மாரிமுத்து ஹீரோயினாக நடிக்கிறார். முக்கிய வேடங்களில் இனிகோ பிராபகர், மிப்புசாமி, குமார் நடராஜன் நடிக்கின்றனர். ‘பீச்சாங்கை’, ‘கஜினிகாந்த்’, ‘டிராபிக் ராமசாமி’ ஆகிய படங்களின் இசை அமைப்பாளர் பாலமுரளி பாலு இசை அமைக்கிறார். கேகே ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் தொடக்க விழா பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடந்தது. சைக்கலாஜிக்கல் திரில்லராக உருவாகும் இப்படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படுகிறது.