ஐதராபாத்: தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து ‘பாகுபலி 1’, ‘பாகுபலி 2’ ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு பான் இந்தியா நடிகராக மாறியவர், ராணா டகுபதி. தற்போது அவர் வெளியிடும் படத்துக்கு ‘கீதா கோலா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 3ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தில் 8 முக்கிய கேரக்டர்களில் பிரமானந்தம், தருண் பாஸ்கர், சைதன்யா ராவ் மடாடி, ரகுராம், ரவீந்திர விஜய், ஜீவன் குமார், விஷ்ணு, ராக் மயூர் ஆகியோர் நடித்துள்ளனர். விஜி சைன்மா நிறுவனம் சார்பில் கே.விவேக் சுதன்ஷு, சாய் கிருஷ்ணா கட்வால், ஸ்ரீனிவாஸ் கவுசிக் நந்தூரி, ஸ்ரீபாத் நந்திராஜ், உபேந்திர வர்மா இணைந்து தயாரித்துள்ளனர். தருண் பாஸ்கர் தாஸ்யம் ஸ்கிரிப்ட் எழுதி இயக்கியுள்ளார். ஏ.ஜே.ஆரோன் ஒளிப்பதிவு செய்ய, விவேக் சாகர் இசை அமைத்துள்ளார். தருண் பாஸ்கர் வசனம் எழுதியுள்ளார்.
26