ஐதராபாத்: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான படம் ‘புஷ்பா’. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் சமந்தா ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. மேலும், இப்படத்திற்காக அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 2ம் பாகம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இந்நிலையில், ‘புஷ்பா 2’ படப்பிடிப்பு தளத்தில் நடக்கும் விஷயங்களுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அல்லு அர்ஜுன். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் ‘புஷ்பா 2’வில் இடம்பெறும் அல்லு அர்ஜுனின் லுக் வெளியாகியுள்ளது.
45