“பாகுபலி” திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியின் மூலம் இந்திய அளவில் அறியப்பட்ட ஹீரோவானார் நடிகர் பிரபாஸ். இதையடுத்து அவர் நடித்த ‘சாஹோ’, ‘ராதே ஷ்யாம்’, கடைசியாக வெளியான ‘ஆதிபுருஷ்’ ஆகிய படங்கள் தோல்வியை தழுவியது. இந்நிலையில் கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகிவரும் ‘சலார்’ படம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி படம் “ப்ராஜெக்ட் கே” திரைப்படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தில் பிரபாஸ் நடிக்கும் கதாபாத்திரம் குறித்து தகவல்கள் கசிந்துள்ளது. இந்த படத்தில் கல்கி உருவாக்கிய கடவுள் விஷ்ணுவின் கடைசி அவதாரம் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இது சயின்ஸ் பிக்சன் கதை களத்தில் உருவாக உள்ளதாகவும் நல்ல சக்திக்கும், தீய சக்திக்கும் நடக்கும் கதையில் இறுதியில் தீய சக்தியை வென்று உலகத்தை காப்பாற்றுவது தான் இந்த படத்தின் கதை எனவும் கூறப்படுகிறது.