ஐதராபாத்: தெலுங்கு நடிகர் ராணா, மலையாள நடிகர் துல்கர் சல்மான் முதல்முறையாக இணைந்து தயாரிக்கும் படத்துக்கு ‘காந்தா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார். பான் இந்தியா படமாக உருவாகும் இதை ராணாவுடைய ஸ்பிரிட் மீடியா, துல்கர் சல்மானுடைய வேஃபாரெர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. துல்கர் சல்மான் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ராணா நடிப்பது குறித்து அறிவிக்கவில்லை. இப்படம் குறித்து ராணா கூறுகையில், ‘நல்ல திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்றால், மிகச்சிறந்த கதையை தேர்வு செய்ய வேண்டும். ஆனால், மாறுபட்ட கதையைக் கண்டறிவது மிகவும் கடினம். அப்படி நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த கதை ‘காந்தா’. இப்படத்தின் கதையும், அதில் அமைந்த கதாபாத்திரங்களும் என்னையும், துல்கர் சல்மானையும் இப்படத்துக்காக இணைந்து பணியாற்றச் செய்துள்ளது. இந்தப் பயணத்தை தொடங்குவதில் நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். அதிக திறமைசாலி துல்கர் சல்மானை ‘காந்தா’ உலகத்துக்கு வரவேற்கிறேன்’ என்றார்.
49