சென்னை: இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவான ‘இறுதிச்சுற்று’ படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்திருந்தவர் நடிகை ரித்திகா சிங். இவர் நிஜமான குத்துச்சண்டை வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவர் தற்போது கராத்தேயில் பிளாக் பெல்ட் மூன்றாவது டான் கிரேடிங் தேர்வை தனது தந்தையுடன் முடித்து பிளாக் பெல்ட் வாங்கி உள்ளார். மேலும் இந்திய கராத்தே அணி வீரர்களுடன் அவர் எடுத்துள்ள புகைப்படத்தையும் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. பிளாக் பெல்ட் வாங்கிய நடிகை ரித்திகாவிற்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
91