சென்னை: ரொமான்டிக் ஹீரோவாக விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. பிச்சைக்காரன்-2 படத்தை தொடர்ந்து, விஜய் ஆண்டனி நடிப்பில் கொலை திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், அடுத்ததாக தான் நடிக்கவிருக்கும் திரைப்படம் குறித்து விஜய் ஆண்டனி அப்டேட் கொடுத்துள்ளார். அறிமுக இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் இப்படத்தில் நாயகியாக மிருணாளினி ரவி நடிக்க உள்ளார். இப்படத்துக்கு ரோமியோ என தலைப்பு வைத்துள்ளனர். இசையமைப்பாளர் பரத் தனசேகர் இசையமைக்கும் நிலையில், இளவரசு, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய் உள்ளிட்ட நடிகர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இப்படத்தை விஜய் ஆண்டனியே தனது குட் டெவில் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். ஆக்ஷன், சென்டிமென்ட், சஸ்பென்ஸ் என தொடர்ந்து சீரியஸான கதைக்களம் கொண்ட திரைப்படங்களில் விஜய் ஆண்டனி நடித்து வந்த நிலையில், இவற்றில் இருந்து மாறுபட்டு காதல் ததும்பும் ரொமாண்டிக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
55