மும்பை: நெட்ஃபிளிக்ஸின் ‘தி ஆர்ச்சிவ்ஸ்’ படத்தில் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் நடித்து வருகிறார். 23 வயதாகும் சுஹானா மகாராஷ்டிராவில் உள்ள ஒரு தீவு நகரமான அலிபாக் நகரில் தால் கிராமத்தில் ஒரு விவசாய நிலத்தை ரூ.12.91 கோடிக்கு வாங்கியுள்ளார். இந்தச் சொத்தின் பதிவு ஆவணங்களில் சுஹானா, ஒரு விவசாயி என குறிப்பிடப்பட்டுள்ளது. சுஹானா 1.5 ஏக்கர் விவசாய நிலத்தையும் அதில் 2,218 சதுர அடி கட்டமைப்புகளையும் கையகப்படுத்தியுள்ளார். அவர் அந்த நிலத்தை அஞ்சலி, ரேகா மற்றும் பிரியா கோட் ஆகிய மூன்று சகோதரிகளிடமிருந்து வாங்கியுள்ளார். அவர்கள் பெற்றோரிடமிருந்து நிலத்தை வாரிசாகப் பெற்றனர் மற்றும் 77.46 லட்சம் ரூபாய் முத்திரை கட்டணம் செலுத்தியுள்ளனர். சுஹானாவின் சொத்து தேஜாவு ஃபார்ம் நிறுவனம் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஷாருக்கானின் மனைவி கௌரி கானின் தாயார் சவிதா சிப்பரும் சகோதரி நமிதா சிப்பரும் இயக்குநர்களாக உள்ளனர். ஷாருக்கானுக்கு அலிபாக்கில் ஒரு ஆடம்பரமான பண்ணை வீடு உள்ளது. இங்கு அடிக்கடி அவர் பார்ட்டி நடத்துவார். அவரது பிறந்த நாள் கொண்டாட்டங்களும் இங்குதான் நடைபெறும். இந்த இடத்திலிருந்து 12 கிமீ தூரத்தில் சுஹானா வாங்கிய நிலம் உள்ளது. இங்கு ஆட்களை நியமித்து விவசாயம் மேற்கொள்ள ஷாருக்கான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
68