ஐதராபாத்: அல்லு அரவிந்த் வழங்க, கீதா ஆர்ட்ஸ் சார்பில் உருவாகும் படத்தில் நாகசைதன்யா ஹீரோவாக நடிக்கிறார். பான் இந்தியா படமாக உருவாகும் இதற்கு ‘என்சி23’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. சந்து மொண்டேட்டி எழுதி இயக்குகிறார். ஹீரோயினாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவரது போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இதற்கு முன்பு நாகசைதன்யாவும், சாய் பல்லவியும் ‘லவ் ஸ்டோரி’ என்ற படத்தில் நடித்திருந்தனர். மீனவர் குப்பம் மற்றும் அவர்களின் வாழ்வியல் குறித்த கதையாக உருவாகும் ‘என்சி23’ படத்தில், மீனவ இளைஞன் வேடத்தில் நாகசைதன்யா நடிக்கிறார். முன்னதாக ஹீரோயின் வேடத்துக்கு அனுபமா பரமேஸ்வரன், கீர்த்தி சுரேஷ், கிரித்தி ஷெட்டி ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருந்தது. தற்போது சாய் பல்லவி நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.