ஐதராபாத்: சமந்தா மயோசிடீஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவர் ஏற்கனவே நடித்து முடித்து இருந்த ’சாகுந்தலம்’ ’குஷி’ உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆகின. இந்நிலையில் சிகிச்சை முடியும் வரை வேறு படங்களில் ஒப்பந்தம் ஆகாமல் இருந்த சமந்தா, உடல் நலனில் முழு அக்கறை செலுத்தி வந்தார். தற்போது அவர் கிட்டத்தட்ட நோயில் இருந்து மீண்டு விட்டதாகவும் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ராஜ்-டிகே இயக்கத்தில் உருவாகும் ’சிட்டாடல்’ என்ற வெப் தொடரில் நடித்து வரும் சமந்தா, தற்போது ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாக இருக்கும் அடுத்த படமான ஆர்.சி 16ல் (தற்காலிக தலைப்பு) நாயகி ஆக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். புஜ்ஜி பாபு இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகயிருக்கும் இந்த படத்தில் சமந்தாவும் இணைந்துள்ளதை அடுத்து படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ராம்சரண் தேஜாவின் 16வது படமாக உருவாக இருக்கும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.