தெலுங்கில் ஷிவ நிர்வானா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா ேஜாடி சேர்ந்து நடிக்கும் படம், ‘குஷி’. இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவிகிதம் முடிவடைந்த நிலையில், மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சமந்தா, உடனே ஐதராபாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. தகுந்த சிகிச்சை பெற்று உடல்நிலை தேறிய அவர், மகளிர் தினத்தையொட்டி இப்படத்தின் ஷூட்டிங்கில் மீண்டும் பங்கேற்றார்.
இந்நிலையில், ‘குஷி’ படம் வரும் செப்டம்பர் 1ம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்துள்ள பான் இந்தியா படமான ‘சாகுந்தலம்’, வரும் ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வருகிறது. இந்தியில் ‘சிட்டாடல்’ என்ற வெப்தொடரில் நடித்து வரும் சமந்தா, சமீபத்தில் ‘சாகுந்தலம்’ படத்தின் சிறப்புக்காட்சியைப் பார்த்துவிட்டு, இப்படம் தன் இதயத்துக்கு மிகவும் நெருக்கமானது என்று கமெண்ட் வெளியிட்டுள்ளார்.