சென்னை: மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார் சமந்தா. சமந்தா திடீரென மயோசிடிஸ் எனும் தசை அழற்சி நோயினால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பாதிக்கப்பட்டார். உடனே அவர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்தார். முழுவதும் குணமடையாததால் அவர் மீண்டும் அமெரிக்கா சென்று சிகிச்சை மேற்கொள்ளப் போவதாகவும் இதற்காக ஒரு வருடம் அவர் சினிமாவில் இருந்து விலகப்போவதாகவும் செய்திகள் வெளியாயின.
இந்நிலையில், தோழியுடன் வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்ற அவர், ‘குஷி’ படத்தின் புரமோஷனிலும் சமீபத்தில் கலந்துகொண்டார். அதை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் ஐதராபாத்தில் இருந்து நியூயார்க் சென்றுள்ளார். அவருடன் அவர் அம்மாவும் சென்றுள்ளார். நியூயார்க்கில் இன்று நடைபெறும் இந்திய சுதந்திர தின கொண்டாட்ட பேரணியில் கலந்துகொள்கிறார்.
பின்னர், அங்கு சில மாதங்கள் தங்கியிருந்து சிகிச்சை மேற்கொள்ளும் சமந்தா முழுவதும் குணமடைந்த பின் இந்தியா திரும்புவார் என்று கூறப்படுகிறது. இதனால் புதிய படங்கள் எதையும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. மயோசிடிஸ் நோய் காரணமாக, 2 படங்களின் வாய்ப்புகளையும் அவர் தவறவிட்டுள்ளார்.