ஹாலிவுட்டில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள வெப்தொடர், ‘சிட்டாடல்’. இதில் ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா இணைந்து நடித்துள்ளனர். ஸ்பை தொடரான இது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில், வாரம் ஒரு எபிசோடு வெளியாகி வருகிறது. இதன் இந்திய பதிப்பில் சமந்தா, பாலிவுட் நடிகர் வருண் தவான் இணைந்து நடித்து வருகின்றனர். இது பிரியங்கா சோப்ரா நடிக்கும் தொடரின் ரீமேக் என்று தகவல் வெளியானது.
இந்நிலையில், ‘இரண்டு வெப்தொடரும் ஒரே கதை கொண்டதா? அல்லது ஹாலிவுட் ‘சிட்டாடல்’ தொடரின் ரீமேக்காக இந்தியப் பதிப்பு உருவாகி வருகிறதா?’ என்று சமூக வலைத்தளத்தில் சமந்தாவிடம் ஒரு ரசிகர் கேட்டார். அதற்கு பதிலளித்த சமந்தா, ‘தற்போது நான் நடிப்பது, ஹாலிவுட் தொடரின் ரீமேக் இல்லை’ என்றார். இத்தொடரை ராஜ், டீகே இணைந்து இயக்குகின்றனர். திடீரென்று சமந்தா மறுப்பு தெரிவித்துள்ளதை அறிந்த ரசிகர் ஏமாற்றம் அடைந்துள்ளார்.